சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக 24 முதல் 28-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், அதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஏழை, எளிய மக்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புறம்போக்கு மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து தலைமுறை, தலைமுறையாக பல லட்சம் பேர், பல வருடங்களாகவே வசித்து வருகிறார்கள். ஆனால், அந்த இடங்களுக்கு உரிய வகையில் பட்டா கிடைக்காமல் தவித்தும் வருகிறார்கள்..
பட்டா வழங்க போராட்டங்கள்
அதனால்தான், நீண்ட காலமாக குடியிருப்போர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.. குறிப்பாக, சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் "பெல்ட் ஏரியா" எனப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
அதுபோலவே, மதுரை, நெல்லை போன்ற மாநகராட்சிகளிலும் இதே பிரச்சனை நிலவுகிறது. இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டுதான், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் நகராட்சிகள் மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.
முதல்வரின் இந்த அறிவிப்பானது, 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவி கொண்டிருக்கும் பிரச்சனைக்கும் தீர்வையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்கள்
இதனிடையே, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்காக சிறப்பு முகாம்களும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. அந்தவகையில், 24 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டிருந்த அறிப்பில், பிப்ரவரி 26-ம் தேதி மாதவரம், எழும்பூர், அம்பத்தூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகள், பிப்ரவரி 27-ம் தேதி மாதவரம், ஆர்.கே.நகர், அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டப்பகுதிகள், 28-ம் தேதி மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர், சைதை திட்டப் பகுதிகளில் முகாம் நடைபெறும்" என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்றே கடைசி -
பொதுமக்களுக்கு வேண்டுகோள் இந்நிலையில், இன்றுடன் முகாம் முடிவடைகிறது. நேற்றைய தினம் மாதவரம், ஆர்.கே.நகர், அண்ணா நகர், எழும்பூர், மயிலாப்பூர், விருகம்பாக்கம் திட்டம் பகுதிகளில் முகாம்கள் நடைபெற்ற நிலையில், கடைசி நாளான மாதவரம், பெரம்பூர், அண்ணாநகர், மயிலாப்பூர், தி.நகர், சைதை திட்டப் பகுதிகளில் முகாம் நடைபெற உள்ளது.. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
0 Comments