செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எந்த தேதிக்குள் பணம் செலுத்தினால் லாபம்?

Follow Us

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எந்த தேதிக்குள் பணம் செலுத்தினால் லாபம்?

 சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எந்த தேதியில் பணம் செலுத்தினால் லாபகரமானதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு ஆண்டுக்கு எவ்வளவு பணம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம்.

                                                                        



இதுகுறித்து சமூகவலைதளத்தில் வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் என்பவர் கூறியிருப்பதாவது: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எந்த தேதிக்குள் பணம் செலுத்தினால் லாபகரமாக இருக்கும்?

செல்வமகள் சேமிப்புத் திட்டம் அதாவது சுகன்யா சம்ருத்தி யோஜனாவில், நல்லதொரு வட்டி விகிதம் வருடந்தோறும் கிடைக்கிறது. தற்போதைய வட்டி விகிதம் 8.2%. இது காலாண்டிற்கு காலாண்டு மாறலாம். இது ஒரு அருமையான கூட்டு வட்டித் திட்டம். இந்த திட்டத்தில் மாதா மாதம் வட்டி கணக்கிடப்பட்டு, வருடக் கடைசியில் அசலுடன் சேர்க்கப்படுகிறது.

 ஒரு மாதத்தின் 5 ஆம் தேதியிலிருந்து, மாதத்தின் இறுதி வரையிலான குறைந்தபட்ச பாக்கி(minimum balance) அசலாகக் கருதப்பட்டு வட்டி கணக்கிடப்படுகிறது. எனவே, ஒருவர் சுகன்யா சம்ருத்தி திட்டத்தில் முழு பயனைப் பெற, நிதி ஆண்டின்(Fiscal year) ஆரம்பத்திலேயே, அதாவது நிதி ஆண்டின் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலத்தில், ஏப்ரல் 5 அல்லது 5ஆம் நாளுக்கு முன்னதாக, அதிகபட்சத் தொகையான 1.5 இலட்ச ரூபாய் தொகையை முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு முழுவதுமாக வட்டி கிடைக்கும். ஒரு மாதம் தாமதித்தால் கூட, அந்த மாதத்தின் மாதாந்திர வட்டியை இழக்க நேரும். எனவே, பணத்தின் வளர்ச்சி சற்று குறையும். நிதி ஆண்டின் இறுதியில் மார்ச் மாதத்தில் முதலீடு செய்தால், அந்த நிதி ஆண்டின் மொத்த வட்டியையும் இழக்க நேரும். அடுத்த நிதி ஆண்டிற்கே, அந்த முதலீடு வட்டி அளிக்கத் தொடங்கும்.

எனவே, நிதி ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் முதல் 5 நாட்களுக்குள், மொத்த தொகையையும் (1.5 இலட்ச ரூபாய்) முதலீடு செய்வது சிறப்பானது. அவ்வாறு முடியாத பட்சத்தில், எவ்வளவுக்கெவ்வளவு தொகையை மாதாந்திரம் 5 ஆம் தேதிக்குள் முதலீடு செய்கிறோமோ, அந்த அளவிற்கு வட்டி அதிகமாக கிடைக்கும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் 1.5 இலட்ச ரூபாயை முதலீடு செய்ய முயல வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், கூட்டு வட்டித் திட்டத்தின் பயனைச் சிறப்பாகப் பெற முடியும். பின்வரும் அட்டவணை, மாதாந்திரம் பணத்தை பிரித்து முதலீடு செய்வதால் கிடைக்கும் வட்டியைக் குறிப்பிடுகிறது.





இதற்கு பதிலாக நிதி ஆண்டின் ஆரம்பத்திலேயே, ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள், 1.5 இலட்ச ரூபாய் முதலீடு செய்தால், அந்த வருடத்திற்கான மொத்த வட்டி நமக்கு கிடைக்கும்.

Post a Comment

0 Comments