வீடு மாறுகிறீர்களா? புதுசா வீடு கட்டுறீங்களா? அப்போ உங்களுக்குத்தான்.. இபி சொன்ன முக்கிய செய்தி

Follow Us

வீடு மாறுகிறீர்களா? புதுசா வீடு கட்டுறீங்களா? அப்போ உங்களுக்குத்தான்.. இபி சொன்ன முக்கிய செய்தி

 சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாரியம் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் வீடு மாறினால் இணைப்புகளில் பெயரை மாற்றுவது, புதிய வீடு வாங்கினால் எளிதாக இணைப்புகளை பெறுவதற்கு என்று தமிழ்நாடு மின்சார வாரியம் எளிமையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.




மின்சார வாரியத்தின் அணைத்து இணைய சேவைகளும் இப்போது புதிய இணையதள முகவரிக்கு மாற்றப்பட்டு உள்ளது. http://app1.tangedco.org/nsconline/ என்ற முகவரிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

முன்னதாக tangedco பழைய முகவரியில் கட்டணம் செலுத்துவது தொடங்கி பல சேவைகள் கடினமாக இருந்தன. அவை மெதுவாக இயங்கின. இப்போது அது மொத்தமாக மாற்றப்பட்டு புதிய சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இனி ஒரே இடத்தில் மக்கள் அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள முடியும். இந்த பக்கத்தில் சென்று இனி எளிதாக வீடு மாறினால் இணைப்புகளில் பெயரை மாற்றுவது, புதிய வீடு வாங்கினால் எளிதாக இணைப்புகளை பெற முடியும். இதற்காக நேரடியாக இனி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. ஏற்கனவே தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ குறியீடு, இருக்கும். எண் 94987 94987 என்பதை உறுதி செய்து கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதில் கிளிக் செய்தால் நம்முடைய கட்டண விவரத்தை காட்டும்.

இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும். மின்சார வாரியம்: தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது, புதிய முறை: இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள் எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.


Post a Comment

0 Comments