கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. பழைய ஓய்வூதிய திட்டம்.. இன்று அமைச்சரவை கூட்டத்தில் 2 முக்கிய முடிவு?

Follow Us

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. பழைய ஓய்வூதிய திட்டம்.. இன்று அமைச்சரவை கூட்டத்தில் 2 முக்கிய முடிவு?

 சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தொகை நீட்டிப்பு ஆகியவை குறித்த அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றன. அதேபோல, அரசு ஊழியர்களின் விவகாரம் விஸ்வரூபமெடுத்திருப்பதால், இதுகுறித்தும் இன்றையதினம் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.





2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 14ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இதுதான் இந்த ஆட்சிக்கு கடைசியாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய கிடைத்திருக்கும் வாய்ப்பாகும்.

அடுத்த 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்பதால், இடைக்கால பட்ஜெட்டையே அடுத்த வருடம் தாக்கல் செய்ய முடியும். ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இயலாது.

 மகத்தான வெற்றி பெற்ற மகளிர் உரிமைத்தொகை

 அதனால், சட்டப்பேரவை தேர்தலை கருத்தில்கொண்டு, வரப்போகும் பட்ஜெட்டிலேயே முக்கிய திட்டங்களை திமுக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் அமைச்சரவை கூடவுள்ளதால், பட்ஜெட்டில் மட்டுமின்றி, 110 விதியின் கீழும் பல்வேறு அறிவிப்புகள் முதலமைச்சரால் வெளியிடப்படலாம் என தெரிகிறது. அதேபோல, மகளிர் உரிமைத்தொகை குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது. காரணம், மகளிர் உதவித்தொகை திட்டம்தான், திமுக அரசுக்கு மிகப்பெரிய பூஸ்ட் போல அமைந்து வருகிறது.. பட்டிதொட்டியெங்கும் இந்த திட்டத்தின் பலன்கள் நேரடியாகவே பெண்களை சென்றடைந்திருப்பது, திமுக அரசுக்கான வெற்றியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

அரசின் இலக்கு இது மட்டுமே இந்த திட்டத்தில் இப்போது சுமார் 1.15 கோடி பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் சென்று கொண்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்காக உள்ளது.. அதேநேரத்தில் தகுதியுள்ள பெண்கள் இன்னும் சில லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாமல் உள்ளனர். அவர்கள் இந்த திட்டத்தில் சேர வேண்டும் என நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.. இவர்களுக்கான மகிழ்ச்சி தரும்வகையில், வரக்கூடிய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வரலாம் என தெரிகிறது. துணை முதல்வர் தந்த உறுதி அதேபோல, சமீபத்தில் இந்த திட்டம் குறித்து பேசியிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் இன்னும் 3 மாதங்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறியுள்ளார். அப்போது தகுதியுள்ள மகளிர் அனைவரும் இந்த திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள்" என்று உறுதி தந்துள்ளார்.

எனவே, வரப்போகும் பட்ஜெட்டில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கலாம் என்பதால், இதுகுறித்தும் இன்றைய தினம் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. அரசு ஊழியர்கள் அதேபோல, அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரமாகியிருக்கிறது.. நேற்றைய தினம் அமைச்சர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையாத நிலையில், ஏற்கனவே அறிவித்த சாலை மறியலுக்கு பதிலாக தற்செயல் விடுப்பு எடுத்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.. முன்னதாக, இதுகுறித்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை சாலை மறியல், ஆர்ப்பாட்டம், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட எந்த வித போராட்டங்களிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட கூடாது என்று தடை விதித்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அறிக்கை தாக்க செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எனினும் தமிழகம் முழுவதும் 11 லட்சம் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், இன்றைய தினம் இதுகுறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Post a Comment

0 Comments