Post Office RD Scheme: ரூ.2,000 போட்டால் போதும்.. அட்டகாசமான வருமானம் உறுதி!

Follow Us

Post Office RD Scheme: ரூ.2,000 போட்டால் போதும்.. அட்டகாசமான வருமானம் உறுதி!

 தங்கள் முதலீட்டை உடனே இரட்டிப்பாக்க வேண்டும் அல்லது 3 மடங்காக மாற்ற வேண்டும் என்பதற்காக பலர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நாடுகின்றனர். ஆனால் தங்கள் முதலீட்டுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாது என்றால் உடனடியாக மக்கள் நாடுவது போஸ்ட் ஆபீஸ்களை தான். போஸ்ட் ஆபிஸ்களில் RD மற்றும் FD திட்டங்கள் வழங்கப்படுகிறது. FD திட்டங்களில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். இது அனைவராலும் முடியாது. எனவே சாமானியர்களும் பலன் பெற வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட RD திட்டத்தில் முதலீடு செய்து பலன் பெறலாம்.

                                                                           



சிலர் வீட்டில் மாதமாதம் குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைக்கலாம் என்ற முடிவில் இறங்கி சேர்க்கத் தொடங்குவார்கள். ஆனால் எப்படி தான் செலவாகிறது என்பது தெரியாமல் தங்கள் பணத்தை எடுத்து விடுவார்கள். இதற்கு பதிலாக போஸ்ட் ஆபீஸ்களில் முதலீடு செய்து வந்தால் முதிர்வு காலம் வரை பணத்திற்கு வட்டியும் சேர்த்து வழங்கப்படும். கண்டிப்பாக உங்கள் சேமிப்பிற்கும் சரி, வருமானத்திற்கும் சரி இது சிறந்த வழி.

போஸ்ட் ஆபீஸ் RD: போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் மாதம் ரூ. 2000, ரூ. 3000 மற்றும் ரூ. 5000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்? கிடைக்கும் என்று பார்ப்போம். RD திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சிறு தொகையிலிருந்து முதலீடு செய்யலாம் .குறைந்தபட்சமாக ஒருவர் போஸ்ட் ஆபீஸ் கணக்கு தொடங்கி 100 ரூபாய் முதல் முதலீடு செய்ய முடியும். 100 ரூபாய் சேர்த்துக் கொண்டே வந்தீர்கள் என்றால்.. உங்களுக்கு வட்டி வழங்கப்படும். இல்லை இன்னும் அதிகமாக முதலீடு செய்ய விருப்பம் என்றால் அதையும் நீங்கள் செய்யலாம். இதற்கு எந்தவித வரம்பும் இல்லை. 

உங்களால் எவ்வளவு முடிகிறதோ அந்த தொகையை முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் கணக்கு தொடங்கும்போது எவ்வளவு தொகை சேமிக்கிறீர்களோ, அதுதான் மீதமுள்ள முதிர்வு காலம் வரை. உதாரணமாக ஒரு மாதம் 1000 மறுமாதம் 2000 அப்படி எல்லாம் தேர்வு செய்து முதலீடு செய்ய முடியாது. சீராக ஒரே தொகையை வரவு வைக்க வேண்டும். போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

RD திட்டத்தில் மாதம் ரூ. 2,000 முதலீடு: ஒருவர் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் மாதம் ரூ. 2,000 முதலீடு செய்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு இதேபோல முதலீடு செய்து வந்தால், 5 ஆண்டுகள் கழித்து ரூ.1,20,000 முதலீடு செய்திருப்பார். இதற்கும் 6.7 சதவீத வட்டி வழங்கப்பட்டால் வருமானமாக ரூ.22,732 கிடைக்கும். ஆசலும் வட்டியும் சேர்த்து ரூ.1,42,732 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.

RD திட்டத்தில் மாதம் ரூ. 3,000 முதலீடு: அதே ஒருவர் மாதம் 3,000 ரூபாயை RD திட்டத்தில் வரவு வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு ரூ.1,80,000 முதலீடு செய்திருப்பார். இதற்கு ரூ.34,097 வட்டி வருமானம் கிடைக்கும். முதிர்வில் வட்டியும் அசலும் சேர்த்து ரூ.2,14,097 பெற்றுக் கொள்ளலாம். RD திட்டத்தில் மாதம் ரூ. 5,000 முதலீடு: அதே ஒருவர் மாதம் 5,000 ரூபாயை RD திட்டத்தில் வரவு வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு ரூ.3,00,000 முதலீடு செய்திருப்பார். இதற்கு ரூ.56,830 வட்டி வருமானம் கிடைக்கும். முதிர்வில் வட்டியும் அசலும் சேர்த்து ரூ.3,56,830 பெற்றுக் கொள்ளலாம்.


Post a Comment

0 Comments