நிலத்தை வைத்திருப்போர் அறிந்து கொள்ள வேண்டியது.. அசையும் சொத்துக்கள், அசையா சொத்து எவை எவை?

Follow Us

நிலத்தை வைத்திருப்போர் அறிந்து கொள்ள வேண்டியது.. அசையும் சொத்துக்கள், அசையா சொத்து எவை எவை?

 சென்னை: சொத்துக்களை வாங்குவோர் தெரிந்து கொள்ள வேண்டியது, அசையும் சொத்து எது? அசையா சொத்து எது? என்பதுதான்.. இதை தெளிவாக தெரிந்து கொண்டால், பதிவு செய்வது குறித்த துல்லியமான விவரங்களை நம்மால் பெற முடியும். இதை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.




ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியாத சொத்துக்களைதான், அசையா சொத்து என்பார்கள்.. உதாரணத்துக்கு வீடு, கடை, தொழிற்சாலை போன்றவை அசையா சொத்துக்கள் ஆகும்.. 1897 பொது உட்பிரிவுகள் சட்டத்தின் 3(26) பிரிவின்படி, அசையா சொத்துகள் என்பது நிலம் மற்றும் பிறவற்றுடன், பூமியில் இணைக்கப்பட்ட அல்லது நிரந்தரமாக வேரூன்றிய சொத்துக்கள் ஆகும்.

பண்ணைகள், தோட்டங்கள் அதுமட்டுமல்ல, அப்பார்ட்மென்ட்கள், குடோன்கள், உற்பத்தி தளங்களும், ரியல் எஸ்டேட் சொத்துக்களாகவே உள்ளன.. அதேபோல, நிலம், மனைகள், வயல் காடு, பண்ணைகள், தோட்டங்கள், நிலத்தின் மீதுள்ள கட்டிடம், கிணறு, மின் இணைப்புள்ள மோட்டார்கள், பாதை, வழி, சாலை மீதுள்ள உரிமைகள், படகுத்துறை மீன் வளங்கள் ஆற்று நீர், ஏரி நீர் போன்றவைகளின் உரிமைகள், இவை எல்லாமே அசையா சொத்துக்கள் என்றே கணக்கிடப்படுகின்றன. இந்த அசையா சொத்துக்கள் வரிகளுக்கு உட்பட்டவையாகும்.. இந்த அசையா சொத்தின் மதிப்பு 100 ரூபாய்க்கு மேல் இருந்தால், பதிவுச் சட்டம் 1908ன் கீழ் அதனை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.. இப்படி பதிவு செய்துடன், அதன் மதிப்பு கணக்கிடப்பட்டு முத்திரை தாளினை மறக்காமல் பதிவு அலுவலகரிடமிருந்து வாங்கிவிட வேண்டும்..

அசையா சொத்துக்கள் ;:

என்னென்ன அசையா சொத்துக்களை உயில் அல்லது அன்பளிப்பாகவோ அல்லது பிரித்து வைக்காமல் யாருக்கும் மாற்ற முடியாது. பிரிக்கக்கூடிய சொத்துக்களாக இருக்க வேண்டும்..

உதாரணத்துக்கு தொழிற்சாலையில் பல இயந்திர தளவாடங்கள் தரையோடு தரையாக சேர்ந்து இருக்கிறதென்றால் அது அசையா சொத்தாகும். ஏனென்றால், இந்த எந்திர தளவாடங்களை பிரித்து எடுக்க முடியும்... ஆனாலும் பிரித்தெடுக்காமல் விற்பனை செய்தால் அந்த பொருளையும் அசையா சொத்தாக கணக்கிடப்படும். இதற்கும் பதிவு கட்டணம் கட்டி, பதிய செய்ய வேண்டும். 

தொழிற்சாலை எந்திரங்களை பதிவு செய்யாத ஆவணத்தின் உரிமம் மாற்றினால் அந்த உரிமம் செல்லாது. இதுவே பிரித்து எடுத்து பதிவு செய்யாமல் விற்றும் கொள்ளலாம். 

அசையும் சொத்துக்கள் என்னென்ன :

அதேபோல, அசையும் சொத்துக்கள் நகரக்கூடிய சொத்துக்களாகும்.. இது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக நகர்த்தக்கூடியவை.. அதாவது, பூமியுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்ட பொருட்களைத் தவிர, மற்ற அனைத்துமே அசையும் சொத்துக்களாகும். உதாரணத்துக்கு கார், வாகனங்கள், நகைகள், லேப்டாப் உள்ளிட்டவையாகும்.. இதனை floating assets என்பார்கள்.. இந்த அசையும் சொத்துகளுக்கு ரெஜிஸ்ட்ரேஷன் தேவையில்லை.

இந்திய அரசின் பதிவுச்சட்டம் 1908 இன் பிரிவு 2(9)ன் படி, அசையும் சொத்துக்களில் டிம்பர், பயிர்கள், புல், மரங்களில் உள்ள பழங்கள் மற்றும் பழச்சாறு ஆகியவை அடங்கும். இந்த அசையும் சொத்துக்களை பிறருக்கு எளிதில் பரிசாக அளிக்கலாம். 

நிலத்தின் மீதான உரிமைகள் :

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். உதாரணத்துக்கு நிலத்தை எடுத்துக் கொண்டால், அசையா சொத்து ஆகும். பம்ப் செட் என்பது அசையும் சொத்து ஆகும். ஆனால் நீங்கள் நிலத்தை விற்கும்போது, பம்பு செட்டையும் சேர்த்து விற்றால், அந்த நிலத்திலிருக்கும் பம்பு செட்டும் அசையா சொத்தாக மாறிவிடும்.

அதேபோல, நிலத்திலிருந்து கிடைக்கும் லாபமும், அசையா சொத்துக்களாகவே கருதப்படும். ஆனால், நிலத்திலிருந்து நிலத்தில் அறுத்து எடுக்கப்படும் பயிர்கள், புல், அந்த நிலத்திலிருந்து கிடைக்கும் பயன்கள், பழங்கள், அதன் சாறுகள், காய்கள், இலைகள் போன்றவை எல்லாமே அசையும் சொத்தாகும்.. இவைகளை பதிவு செய்யாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம். எனவே, அசையும் சொத்தானது நிலத்தில் எப்போதும் நிரந்தரமாக சேர்ந்து இருக்காது...!




Post a Comment

0 Comments