2025-26 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல்.. சபாநாயகர் அப்பாவு

 சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 14-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தேர்தலுக்க்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழு பட்ஜெட் என்பதால் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மத்திய பட்ஜெட் கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு மாநில அரசு தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான மார்ச் மாதம் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சட்டசபை கூடும். காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

இந்த ஆண்டுக்கான தமிழக முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கூடியது. ஆனால், சட்டசபையில் தேசியகீதத்தை முதலில் பாடவில்லை என குற்றச்சாட்டு கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார். அவர் உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் திரும்பி சென்றார். இதையடுத்து சபாநயகர் அப்பாவு வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. 11 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதன்பிறகு தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26, 1ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையினுடைய அடுத்த கூட்டத்தினை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் வைத்து வருகிற 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடும். அன்றைய தினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025 -2026 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார்.

மேலும் பேரவை விதி 193, 1ன் கீழ் 2025-2026 ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும், பேரவை விதி 189,1ன் கீழ் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக்கோரிக்கையினையும், 2025 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் . இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2025-ஆம் ஆண்டு, மார்ச் திங்கள் 14-ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள். மேலும், அன்று காலை 9.30 மணிக்கு 2025-2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் .

2025-2026-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2024-2025-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியன 2025-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்கப்பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments