சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதி விவரங்கள் https://www.tn.gov.in/dept_profile.php?dep_id=MzA= (Social Welfare and Women Empowerment Department) என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதி வாய்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட பதவிகளுக்குரிய படிவத்தில் புகைப்படத்துடன், செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், எண்.183/1, ஈ.வே.ரா. பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு மார்ச் 20-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments