சென்னை: திடீரென சிலர் தங்களது நிலப்பத்திரங்களை அல்லது வீட்டு பத்திரங்களை தொலைத்திருப்பார்கள். மழை, புயல், வீட்டிற்கு வரும் திருடர்கள் போன்றவர்களால் பத்திரம் தொலைந்திருக்கும். அதேபோல் எலி கடித்து வைப்பது, ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு போன போது தொலைத்திருப்பார்கள். இப்படியான சூழலில் பத்திரம் தொலைந்து விட்டால் புது பத்திரம் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்
தற்போதைய நிலையில் பத்திரப்பதிவு துறை கணிணி மயமாகிவிட்டது. எனவே பத்திரம் தொலைந்ததால் பயப்படும் அளவிற்கு நிலைமை இருக்காது. எனினும் பத்திரம் பெறுவதற்கு நாம் அலைய வேண்டியதிருக்கும். காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் என அலைய வேண்டியதிருக்கும். கணிணி மயமாக்கப்பட்ட பின்னர் அனைத்து பத்திரங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு வெப்சைட்டில் சேமிக்கப்பட்டு உள்ளது. எனவே பத்திரம் தொலைந்தால் நகல் காப்பி பெற்றுக் கொள்ளலாம்
ஆனால் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். எனினும் பத்திரம் தொலைந்தால் எஃப்ஐஆர் வைத்து இருப்பது மிகவும் அவசியம் ஆகும். பத்திரம் தொலைந்ததாக எப்ஐஆர் பதிவு செய்து வாங்க வேண்டும். எப்ஐஆர் பதிவு செய்ய தொலைந்து போனது குறித்து முறைப்படி உங்கள் ஊர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கையை பெற்றுக்கொள்ளுங்கள். புகார் அளித்த பின்னர் அதை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்யவேண்டும். அதன் பிறகு நான் டிரேசபிள் சர்ட்டிபிகேட்டை உங்களுக்கு காவல்துறை தரும். அதனை எடுத்துக் கொண்டு சென்றால், நகல் பத்திரத்தை பெறலாம். பொதுவாகவே பத்திரத்தை உங்கள் கைப்பேசி மூலம் பிடிஎப் ஆக ஸ்கேன் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. ஒரு வேளை நகல் இல்லை என்றால் பயப்பட வேண்டாம். சர்வே எண் தெரியவில்லை என்றாலும் பத்திரத்தை வாங்கிவிட முடியும். உங்கள் இடத்தின் பக்கத்து இடம், சுற்றியுள்ள இடங்களின் இடங்களை வைத்து உங்கள் சொத்து ஆவண எண் மற்றும் வருடத்தை கண்டுபிடித்துவிடலாம். ஆவண எண்ணையும்/ வருடத்தையும் கண்டுபிடித்துவிட்டால் எளிதாக பத்திரம் வாங்க முடியும்
.jpg)
0 Comments