தோராய பட்டா, கூட்டுப் பட்டா என்றால் என்ன? கிராம நத்தம், கிராமப்புற விவசாய நிலத்தில் இவ்ளோ மேட்டரா?

Follow Us

தோராய பட்டா, கூட்டுப் பட்டா என்றால் என்ன? கிராம நத்தம், கிராமப்புற விவசாய நிலத்தில் இவ்ளோ மேட்டரா?

 சென்னை: ஒருவர் தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணமே பட்டா என்பது.. இந்த பட்டாவில் பல வகைகள் உள்ளன.. இதில், தோராய பட்டா, கூட்டுப்பட்டா, தனிப்பட்டா, 5. டிஎஸ்எல்ஆர் பட்டா வகைள் என்றால் என்ன? அவைகளின் பயன்கள் என்ன? என்பதை பற்றி மட்டும் சுருக்கமாக இங்கே பார்ப்போம்




ஒன்றுக்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் இருந்தாலும், யார் யாருக்கு எவ்வளவு நிலம் உள்ளது? என்ற கணக்கு தெரியாது. அதேபோல, யாருடைய நிலம், எங்கே அமைந்துள்ளது என்றும் தெரியாது

கூட்டு பட்டா: உரிமையாளர்களில் ஒருவருக்கு அதிகமாகவோ, மற்றவர்களுக்கோ குறைந்த அளவிலோ நிலம் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான பட்டாவே இருக்கும். அனைவரது பட்டாவிலும், அனைவரது பெயரும் இடம்பெற்றிருக்கும். உட்பிரிவு செய்யாமல் உள்ள நிலத்தில் உள்ள எல்லாருக்குமே உள்ளடக்கிய பட்டாவின் பெயர்தான் கூட்டு பட்டா (joint patta) என்பார்கள். பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா மேலானது. ஆனால், கூட்டு பட்டாவை விட தனிப்பட்டா மேலானது. தனி பட்டா (Individual Patta) என்பது, ஒருவர் பெயரில் மட்டுமே இருக்கும். இந்த பட்டாவில் சர்வே எண், உட்பிரிவு எண்கள் தனியாக இருக்கும். தனிப்பட்டா நில உரிமை ஆவணத்தின் தன்மையில் தனியொருவருக்கு பதியப்பட்டதாகும். இதில் பட்டா நம்பர், சர்வே நம்பர், உட்பிரிவு, நிலத்தின் அளவு, FMP வரைபடம் போன்றவை எல்லாம் தெளிவாக இருக்கும்

புறநகர்: புறநகர் அல்லது கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதியாக இருக்கும் அரசு நிலங்களை நத்தம் என்பார்கள். பல்வேறு காரணங்கள் காரணமாக, இங்கு வசித்து வருபவர்களுக்கு தோராய மற்றும் தூய பட்டா அரசால் வழங்கப்படுகிறது... மிகவும் துல்லியமான, பிழையே இல்லாமல், நில அளவையும் சரியாக செய்யப்பட்டிருந்தால் அதற்கு தூய பட்டா எனப்படும்

ஆனால், தோராயம் என்றால், சரியான அளவு இல்லாமல் இருக்கும். அதாவது, நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும்... நிலம் இல்லாதவர்களுக்கும் அல்லது அனுபவ முறையில், அங்கு வசித்து வரும் மக்களுக்கும் அந்த இடத்தில் ஒவ்வொருவருக்கும் பட்டாவை ஒதுக்கும் பட்டாவையே தோராய பட்டா என்கிறோம். தற்காலிக பட்டா: இதில் பிழைகள் ஏதாவது இருந்தால், 45 நாட்களுக்குள் தாசில்தார் அலுவலகம் சென்று மாற்றிக் கொள்ள வேண்டும். பிழைகளை திருத்துவதற்க்கு கால அவகாசம் தரப்படும் என்றாலும், இது ஒரு தற்காலிகமான பட்டா என்பதையும் மறந்துவிடக்கூடாது. TSLR பட்டா என்பது, நகரப்புற நிலத்தின் அளவு மற்றும் பதிவு ஆவணம். இது, டவுன் சர்வே நிலப் பதிவேடு (Town Survey Land Record) என்பதன் சுருக்கமாகும்.. கிராமப்புற விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கப்படுவது போல, நகரப்புற நிலத்திற்கும் TSLR பட்டா வழங்கப்படுகிறது. ,TSLR பட்டாவின் சிறப்பம்சங்கள்: நகரப்புற நிலத்தின் அளவு மற்றும் பதிவு ஆவணம், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படுகிறது

வித்தியாசம்: கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்குமான வேறுபாடு என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது. அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும். ஆனால் கிராம பகுதி சர்வேகளில் தோராயமாக ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்கலாம். அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யப்படுகிறது


Post a Comment

0 Comments