மோடி சொன்ன குட்நியூஸ்.. 8வது சம்பள கமிஷனுக்கு ஒப்புதல்.. கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்!

Follow Us

மோடி சொன்ன குட்நியூஸ்.. 8வது சம்பள கமிஷனுக்கு ஒப்புதல்.. கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்!

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை 8வது சம்பள கமிஷன் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது அடிப்படை சம்பளம், கொடுப்பனவு, ஓய்வூதியங்கள் மற்றும் பிற சலுகைகள் எப்போது உயரும் என எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இந்த முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது




மத்திய அரசின் இந்த முடிவை அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த 8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளையில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

8வது ஊதியக் குழுவின் உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட குழுவின் அமைப்பு மற்றும் அதிகாரம் குறித்த கூடுதல் விவரங்களை அரசு விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 7வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்தது, இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் குறைந்தபட்ச தொகையை ரூ.7,000-லிருந்து ரூ. 18,000 ஆகவும், உயர் அதிகாரிகளின் அதிகபட்ச சம்பளத்தை 2.5 லட்சம் ரூபாய் வரையிலும் உயர்த்தியது. பொதுவாக, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு புதிய சம்பள கமிஷன் மத்திய அரசு நடைமுறைப்படுத்தும். இந்த காலவரையை வைத்துப் பார்க்கும் போது, 8வது சம்பள கமிஷன் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர வேண்டும்


Post a Comment

0 Comments