UPSC CAPF AC அறிவிப்பு 2023 – 322 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

UPSC CAPF AC அறிவிப்பு 2023 – 322 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய ஆயுத போலீஸ் படையில் (CAPF) உதவி கமெண்ட்டுகள் (ஏசி) பதவிக்கு 322 காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான UPSC CAPF (AC) 2023 அறிவிப்பு PDF ஐ யூனியன் பொது சேவை ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நேரடி இணைப்பைப் பார்வையிட்டு ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 16.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC CAPF காலிப்பணியிடங்கள்:
  • BSF – 86 பணியிடங்கள்
  • CRPF – 55 பணியிடங்கள்
  • CISF – 91 பணியிடங்கள்
  • ITBP – 60 பணியிடங்கள்
  • SSB – 30 பணியிடங்கள்

என மொத்தம் 322 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CAPF வயது வரம்பு:

01.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், வயதானது அதிகபட்சம் 20 முதல் 25 க்குள் இருக்க வேண்டும். ஆகஸ்ட் 2, 1998க்கு முன்னதாகவும், 1 ஆகஸ்ட் 2003க்குப் பிறகு பிறந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.

CAPF (AC) கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

UPSC தேர்வு செயல்முறை:
  • எழுத்து தேர்வு
  • உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மற்றும் மருத்துவ பரிசோதனைகள்
  • நேர்காணல்
CAPF AC தேர்வுக் கட்டணம்:
  • SC/ST/ பெண் விண்ணப்பதாரர்கள்: கட்டணம் ஏதும் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்கள்: ரூ.200/-
UPSC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://upsc.gov என்ற இணையதளம் மூலம் 26.04.2023 முதல் 16.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Apply Online

Post a Comment

0 Comments