மாதந்தோறும் ரூ.43,000/- சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை – தேர்வு கிடையாது!

 

மாதந்தோறும் ரூ.43,000/- சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை – தேர்வு கிடையாது!

ஆவின் கன்னியாகுமரியில் உள்ள பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு “Doorstep Veterinary and Emergency Health Care Services” பெற கால்நடை மருத்துவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி ஆனது முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17-05-2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

ஆவின் காலிப்பணியிடங்கள்:

Veterinary Consultant பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கால்நடை ஆலோசகர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் நான்கு சக்கர அல்லது இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

AAVIN சம்பள விவரம்:

மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், கேபி சாலை, நாகர்கோவில்-629003.

Download Notification 2023 Pdf

Post a Comment

0 Comments