ரூ.63,758/- சம்பளத்தில் ISRO வேலைவாய்ப்பு – 94 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் (SDSC SHAR) ஆனது அகில இந்திய அளவில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீஷியன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16-05-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
SDSC SHAR காலிப்பணியிடங்கள்:
Technical Assistant – 11 பணியிடம்
Scientific Assistant – 6 பணியிடங்கள்
Library Assistant-A – 2 பணியிடங்கள்
Technician-B – 71 பணியிடங்கள்
Draughtsman – 3 பணியிடங்கள்
என மொத்தம் 94 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10th, ITI, Diploma, BSc, Graduation இதில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SDSC SHAR சம்பள விவரம்:
Technical Assistant, Scientific Assistant & Library Assistant-A – ரூ.63,758/-
Technician-B, Draughtsman – ரூ.30,814/-
தேர்வு செயல் முறை:
சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் SHAR ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 16-05-2023 அன்று குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும்.
Technical, Scientific & Library Assistant விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250/-
செயலாக்க கட்டணம்: ரூ. 750/-
Technician விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100/-
செயலாக்க கட்டணம்: ரூ. 500/-
தேர்வு செயல் முறை:
Written Test
Skill Test
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் SDSC SHAR அதிகாரப்பூர்வ வலைத்தளமான apps.shar.gov.in இல் 26-04-2023 முதல் 16-மே-2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
0 Comments