SSC Constable (GD) வேலைவாய்ப்பு 2022 – 24369 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது

Follow Us

SSC Constable (GD) வேலைவாய்ப்பு 2022 – 24369 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது

 

SSC Constable (GD) வேலைவாய்ப்பு 2022 – 24369 காலிப்பணியிடங்கள் || சற்று முன் வெளியானது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 24369 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 27.10.2022 முதல் 30.11.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



SSC Constable (GD) வயது வரம்பு:
  • 01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02-01-2000 க்கு முன்னதாகவும் 01-01-2005 க்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது.
  • இருப்பினும், உயர் வயதில் மூன்று (03) ஆண்டுகள் தளர்வு பெற்ற பிறகு, விண்ணப்பதாரர் 02-01-1997-க்கு முன்னதாக பிறந்திருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Constable (GD) கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC Constable (GD) சம்பள விவரம்:
  • NCB யில் சிப்பாய் பதவிக்கு லெவல்–1 ன் படி, ரூ.18,000 முதல் 56,900 வரையும்,
  • மற்ற எல்லாப் பதவிகளுக்கும் லெவல்-3 ன் படி, ரூ. 21,700-69,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

1. Computer Based Examination

2. Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Examination and Document Verification

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்/தேர்வு கட்டணம்:
  • செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ 100/-
  • Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST) and Ex-servicemen (ESM) – கட்டணம் கிடையாது
SSC Constable (GD) விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் SSC இணையதளத்தில் உள்ள https://ssc.nic.in/ என்ற இணைப்பின் மூலம் 27.10.2022 முதல் 30.11.2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf
Apply Online

Post a Comment

0 Comments