மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,44,200/-

 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,44,200/-

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Registrar, Controller of Examinations பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.பல்கலைக்கழக வயது வரம்பு:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 45 மற்றும் அதிகபட்சம் 55 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி விவரங்கள்:

15 வருட கற்பித்தல் அனுபவத்துடன் பல்கலைக்கழகம் அல்லது இணைந்த கல்லூரிகளில் இணைப் பேராசிரியராக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,44,200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர், விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, தமிழ்நாடு என்ற முகவரிக்கு 11-11-2022 அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Post a Comment

0 Comments