IB புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு 2022 – 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் || ஊதியம்: ரூ.69100!!

 

IB புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு 2022 – 1671 SA & MTS காலிப்பணியிடங்கள் || ஊதியம்: ரூ.69100!!

உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது உளவுத்துறை பணியகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி (SA/Exe) & மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப்/ஜெனரல் (MTS/Gen) பதவிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 1671 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



IB Recruitment 2022 கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு சமமான தேர்ச்சி, மற்றும் விண்ணப்பதாரர் விண்ணப்பித்த அந்த மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு உள்ளூர் மொழி / பேச்சுவழக்கு பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

25.11.2022 தேதியின் படி, Security Assistant/Executive பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். MTS/Gen பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IB விண்ணப்ப கட்டணம்:
  • General/EWS/OBC (Male) விண்ணப்பதாரர்கள் – ரூ. 500/-
  • மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ.450/-
Intelligence Bureau சம்பள விவரம் :
  • Security Assistant/Executive – Level-3 (ரூ. 21700-69100) in the pay matrix plus admissible Central Govt. allowances.
  • MTS/Gen – Level-1 (ரூ. 18000-56900) in the pay matrix plus admissible Central Govt. allowances.
SA & MTS தேர்வு செயல் முறை:
  • Tier-I : Online Exam of Objective type
  • Tier-II : Offline Exam of Descriptive type
  • Tier-III : Interview/Personality test
Intelligence Bureau SA & MTS பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் 05.11.2022 முதல் 25.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Post a Comment

0 Comments