மாதம் ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய ஸ்டீல் ஆணையத்தில் (The Steel Authority of India Limited (SAIL)) GDMO மற்றும் Specialist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 16 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்திய ஸ்டீல் ஆணைய காலிப்பணியிடங்கள்:
- GDMO – 10 பணியிடங்கள்
- Specialist – 6 பணியிடங்கள்
SAIL வயது வரம்பு:
விண்ணப்பிக்க இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 69 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
SAIL பணிகளுக்கான தகுதி வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) அல்லது தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அல்லது அந்தந்த சட்டப்பூர்வ/ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவத் துறையில் மருத்துவர்களாக இருக்க வேண்டும் மற்றும் சரியான பயிற்சியாளர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்முக தேர்வானது 13-14 அக்டோபர் 2022 அன்று நடைபெற உள்ளது.
சம்பளம்:
- GDMO – MBBS ரூ.90,000/-
- Specialist – MBBS with PG Diploma in the speciality ரூ.1,20,000/-
- Specialist – MBBS with PG Degree in the Speciality ரூ.1,60,000/-
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments