ஒரு வருகைக்கு ரூ.1000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்களுக்க ஆற்றுப்படுத்துநர் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Psychology/Sociology/or post graduate in Social Work (Medical and Psychiatric ) ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Counsellor தேர்வு செயல்முறை:
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 60 நாட்களுக்கு மிகாமல் /மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000 வழங்கப்படும்.
Counsellor விண்ணப்பிக்கும் முறை:
http://www.thoothukudi.nic என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 06/10/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments