மதுரை Post Officeயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.63200/-

Follow Us

மதுரை Post Officeயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.63200/-

 

மதுரை Post Officeயில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.63200/-

மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 17.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரை Post Office காலிப்பணியிடங்கள்:
  • M.V.Mechanic (Skilled) – 01 பணியிடம்
  • M.V.Electrician – 02 பணியிடம்
  • Painter (Skilled) – 01 பணியிடம்
  • Welder – 01 பணியிடம்
  • Carpenter – 02 பணியிடம்

    அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் எந்த காரணமும் தெரிவிக்காமல் அறிவிப்பை மாற்ற/ரத்துசெய்யும் உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Post Office வயது வரம்பு:

    01.07.2022 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 40 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    Skilled Artisans கல்வி தகுதி:

    அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்தும் பணிக்கு தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது VIII வகுப்பு தேர்ச்சி பெற்று பணிக்கு தொடர்புடைய வர்த்தகத்தில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

  • அஞ்சல் துறை பணிக்கான தேர்வு செயல் முறை:

    மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test முலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாடத்திட்டம், தேதி, இடம் & காலம் போன்றவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சம்பள விவரம்:

    Skilled Artisans – ரூ.19900/- முதல் ரூ.63200/- வரை

    விண்ணப்பிக்கும் முறை:

    ஒன்றுக்கு மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி விண்ணப்பத்தை தனித்தனி உறையில் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அஞ்சல் மோட்டார் சேவை, CTO வளாகம், தல்லாகுளம், மதுரை-625002 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் / பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் மட்டுமே அனுப்பி 17.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Post a Comment

0 Comments