தமிழக ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும் !

 

தமிழக ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும் !

புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் கீழ் 8 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 11 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக ஊராட்சி ஒன்றிய காலிப்பணியிடங்கள்

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு என 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 2 காலிப்பணியிடமும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 2 காலிப்பணியிடமும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் 2 காலிப்பணியிடமும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும், புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும் என ஆகமொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு பாட பிரிவில் பட்டதாரியாக இருக்க வேண்டும். அத்துடன் MS Office படிப்பில் குறைந்த பட்சம் ஆறுமாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள மேற்குறிப்பிட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரில் அலுவலக பணி நேரத்தில் அல்லது தபால் மூலமாக 16.08.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

Post a Comment

0 Comments