கரூர் வைஸ்யா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – முழு விவரங்களுடன் !
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. கிளை விற்பனை மேலாளர் நியமனத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
KVB கரூர் வைஸ்யா வங்கி காலிப்பணியிடங்கள்:
Branch Sales Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sales Manager கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் இருந்து குறைந்தபட்சம் 50% மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொத்த வங்கி அனுபவம் 6 -7 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் இதில் குழு கையாளுதலில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர, விண்ணப்பதாரர்கள் பணியின் இடத்திற்கு ஏற்ப உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
KVB கரூர் வைஸ்யா வயது வரம்பு:
31.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்கும் நபர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Branch Sales Manager பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதார்கள் கீழ்கண்ட படிநிலைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Personality Assessment Test
- Personal Interview
- Offer
- Background Checks & Medicals
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in என்ற இணைய முகவரிக்கு சென்று கிளை விற்பனை மேலாளர் (வேலை ஐடி – 294) பதவிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வேறு எந்த விதமான விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. இப்பணிக்கு 04-08-2022 முதல் 31-08-2022 வரை விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2022 Pdf
Download Instruction Pdf
Apply Online
0 Comments