இந்திய வங்கி வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.20000/- PM வரை சம்பளம்
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (Bank of India) வெளியிட்ட அறிவிப்பில் Faculty பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Bank of India காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், Faculty பணிக்கு என 02 பணியிடங்கள் Bank of India வங்கியில் காலியாக காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Faculty வயது வரம்பு:
இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.08.2022 அன்றைய தேதியின் படி, 25 வயதிற்கு மேல் உள்ளவராகவும் 65 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
Faculty கல்வி விவரம்:
இந்த வங்கி பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Faculty பிற தகுதிகள்:
- இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் MS Office தெரிந்தவராகவும், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Bank of India ஊதியம்:
இந்த வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாத தோறும் ரூ.20,000/- ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bank of India தேர்வு செய்யும் முறை:
இந்த வங்கி பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Personal Interview மற்றும் Demonstration / Presentation ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bank of India விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 14.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
0 Comments