தமிழகத்தில் இன்றைய மத்திய அரசு வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்க விரையுங்கள் !
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Intern பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது.இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
IIITDM பணியிடங்கள்:
காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM) Interns பணிக்கு என 04 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Interns கல்வி விவரம்:
Interns பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Interns வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 24 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Interns உதவித்தொகை:
Interns பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,000/- மாத உதவித் தொகையாக வழங்கப்படும்.
IIITDM தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
IIITDM விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (12.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
0 Comments