மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 1412 காலியிடங்கள் || மாதம் ரூ.71,900 சம்பளம்
சென்னை உயர்நீதிமன்றம் ஆனது 1412 Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator மற்றும் Driver பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீதிமன்ற வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 22.08.2022 க்குள் ஆன்லைன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிட விவரங்கள்:
MHC ஆல் 1412 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன மற்றும் பதவி வாரியான காலியிட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Examiner 118
- Reader 39
- Senior Bailiff 302
- Junior Bailiff 574
- Process Server 41
- Process Writer 3
- Xerox Operator 267
- Lift Operator 9
- Driver 59
MHC கல்வி தகுதி:
- ஓட்டுநர்: 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
- மற்ற அனைத்து பதவிகளும்: SSLC தேர்வில் தேர்ச்சி
வயது வரம்பு: (01.07.2022 தேதியின்படி)
விண்ணப்பதாரர்கள் 01.07.2004 க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது. அதாவது 01.07.2022 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய அனைத்து தகவல்களுக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை:
சென்னை உயர்நீதிமன்ற ஓட்டுனர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்
- ஓட்டுநர் பதவிக்கு: ரூ.500
- மற்ற அனைத்து பதவிகளும்: ரூ.550
- SC/ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் இல்லை.
- ஆன்லைன் முறையில் கட்டணம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
சம்பள விவரம்:
1. Examiner – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900/-
2. Reader – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900/-
3. Senior Bailiff – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900/-
4. Junior Bailiff – Level 7 – ரூ.19,000 – ரூ.69,900/-
6. Process Writer – Level 3 – ரூ.16,600 – ரூ.60,800/-
7. Xerox Operator – Level 3 – ரூ.16,600 – ரூ.60,800/-
8. Lift Operator – Level 2 – ரூ.15,900 – ரூ.58,500/-
9. Driver – Level 8 – ரூ.19,500- ரூ.71,900/-
முக்கிய நாட்கள்:
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 24-07-2022
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28-08-2022
- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 28-08-2022
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது https://www.mhc.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் 24.07.2022 முதல் 22.08.2022 வரை மட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
0 Comments