தமிழக அரசில் பெண்களுக்கான புதிய வேலைவாய்ப்பு 2022 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தஞ்சாவூர் (TNCSC) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 348 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் இந்த தமிழக அரசு பணி வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNCSC தஞ்சாவூர் காலிப்பணியிடங்கள்:
- பருவ கால பட்டியல் எழுத்தர் – 159 பணியிடங்கள்
- பருவ கால உதவுபவர் – 189 பணியிடங்கள்
என மொத்தம் 348 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் வயது வரம்பு:
01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி:
- பருவ கால பட்டியல் எழுத்தர் – இளங்கலை அறிவியியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் முடித்திருக்க வேண்டும்.
- பருவ கால உதவுபவர் – அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNCSC தஞ்சாவூர் ஊதியம்:
- பருவ கால பட்டியல் எழுத்தர் – ரூ.5285 + ரூ.3499 (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.120/-
- பருவ கால உதவுபவர் – ரூ.5218 + ரூ.3499 (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.100/-
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தஞ்சாவூர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 03-ஆகஸ்ட்-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
0 Comments