12 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.40,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Psychologist, Data Entry Operator, Social Worker போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
மாவட்ட நலவாழ்வு சங்கம் காலிப்பணியிடங்கள்:
- District Consultant – 01 பணியிடம்
- Psychologist – 01 பணியிடம்
- Social Worker – 01 பணியிடம்
- Data Entry Operator – 01 பணியிடம்
- IT-Coordinator – 01 பணியிடம்
- Refrigeration Mechanic – 01 பணியிடம்
- Account Assistant – 01 பணியிடம் என மொ
மாவட்ட நலவாழ்வு சங்கம் கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.
- District Consultant பணிக்கு Public Health, Social Sciences, Management பாடப்பிரிவில் Ph.D அல்லது MBBS அல்லது BDS Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Psychologist பணிக்கு Psychology பாடப்பிரிவில் Graduate அல்லது Postgraduate அல்லது MSW Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Social Worker பணிக்கு Sociology, Social work பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Data Entry Operator பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- IT-Coordinator பணிக்கு B.E அல்லது B.Tech அல்லது MCA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Refrigeration Mechanic பணிக்கு Refrigeration Mechanic, Air Conditioning பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Account Assistant பணிக்கு B.Com Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட நலவாழ்வு சங்கம் முன்னனுபவம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 01 வருடம் முதல் அதிகபட்சம் 02 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
மாவட்ட நலவாழ்வு சங்கம் சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் பின்வரும் ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
- District Consultant – ரூ. 40,000/-
- Psychologist, Social Worker – ரூ. 25,000/-
- Data Entry Operator, Account Assistant – ரூ.12,000/-
- IT-Coordinator – ரூ.16,500/-
- Refrigeration Mechanic – ரூ. 20,000/-
மாவட்ட நலவாழ்வு சங்கம் தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மாவட்ட நலவாழ்வு சங்கம் விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 25.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
0 Comments