தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

 

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் வேலை – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகில்‌ காலியாக உள்ள புறத்‌ தொடர்பு பணியாளர்‌ பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு காலிப்பணியிடங்கள்:

புறத்‌ தொடர்பு பணியாளர்‌ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது 30.06.2022ன் படி, அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

பணி அனுபவம்:

குழந்தைகள்‌ சார்‌ வேலைகளில்‌ குறைந்தபட்சம்‌ 1 வருடம்‌ பணி அனுபவம்‌ இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்‌ தங்களது புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பம்‌, உரிய கல்வி சான்றுகள்‌, அனுபவ சான்றிதழ்களுடன்‌ 12.08.2022-ந்‌ தேதி மாலை 05.30 மணிக்குள்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, No.8 &10, DRDA வணிக வளாகம்‌, மாவட்ட மைய நூலகம்‌ எதிரில்‌, கிருஷ்ணகிரி – 635002. தொலைபேசி எண்: 04343-292567, 6382613358 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத்‌ தபாலில்‌ அல்லது dcpokri@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கோ அனுப்பிடல்‌ வேண்டும்‌. மேலும்‌ விண்ணப்பங்களை krishnagiri.nic.in  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ மற்றும்‌ இதுகுறித்த விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில்‌ நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவும்‌ தொடர்பு கொள்ளவும்‌.

Download Notification 2022 Pdf


Post a Comment

0 Comments