தமிழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

தமிழகத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு, சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறையின்‌ கீழ்‌ செங்கல்பட்டு மாவட்டத்தில்‌ ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ காலியாக உள்ள மூத்த ஆலோசகர்‌, தகவல்‌ தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்‌, வழக்கு பணியாளர்‌, பல்நோக்கு உதவியாளர்‌ மற்றும் பாதுகாவலர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 10.08.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு, சமூக நல வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மூத்த ஆலோசகர்‌ – 01
  • தகவல்‌ தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்‌ – 01
  • வழக்கு பணியாளர்‌ – 05
  • பல்நோக்கு உதவியாளர்‌ – 01
  • பாதுகாவலர்‌ – 02
கல்வி தகுதி:
மூத்த ஆலோசகர்‌ :

சமூகப் பணி, மருத்துவ உளவியல் / ஆலோசனை உளவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா திட்டங்களின் நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 2 வருட அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிக்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழக்கு பணியாளர்‌:

சமூக பணி, ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டம். அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு அல்லது அரசு சாரா திட்டங்களின் நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 2 வருட அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிக்கு பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகவல்‌ தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்‌ :

இளங்கலை பட்டம், கணினிகள் / ஐடியில் குறைந்தபட்சம் டிப்ளோமா உடன் தரவு மேலாண்மை முடித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பல்நோக்கு உதவியாளர்‌:

விண்ணப்பதார்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சம்பள விவரம்:
  • மூத்த ஆலோசகர்‌ – ரூ.20,000/-
  • தகவல்‌ தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்‌ – ரூ.18,000/
  • வழக்கு பணியாளர்‌ – ரூ.15,000/-
  • பல்நோக்கு உதவியாளர்‌ – ரூ.6,400/-
  • பாதுகாவலர்‌ – ரூ.10,000/-
விண்ணப்பிக்கும் முறை:

ஒருங்கிணைந்த சேவை மையமானது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக உதவிடும்‌ வகையில்‌ 24*7 செயல்பட வேண்டி உள்ளதால்‌, மேற்படி காலிப்பணியிடங்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தினை சேர்ந்த
விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள்‌ வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌ – 10.08.2022 மாலை 5.45

விண்ணங்கள்‌ வந்து சேர வேண்டிய இடம்‌:

மாவட்ட சமூக நல அலுவலகம்‌,
CRC குறுவள மையக்‌ கட்டிடம்‌,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளி வளாகம்‌,
85 ஆலப்பாக்கம்‌,
செங்கல்பட்டு – 603003.

Download Notification 2022 Pdf

Post a Comment

0 Comments