மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் அரசு வேலை தயார் | TN GOVENMENT JOBS 2022

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் அரசு வேலை தயார் – டிகிரி தேர்ச்சி போதும்..!

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் (DCPU) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் தகவல் தொகுப்பாளர் (Data Analyst) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.DCPU காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தகவல் தொகுப்பாளர் (Data Analyst) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

DCPU கல்வித் தகுதி:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் BA / BCA / B.Sc. Statistics / B.Sc. Mathematics போன்ற டிகிரி (10+2+3 Pattern) அல்லது ஏதேனும் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

DCPU அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தகவல் தொகுப்பாளராக (Data Analyst) குறைந்தது 2 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

DCPU வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

CPU சம்பள விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றார்ப்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DCPU தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DCPU விண்ணப்பிக்கும் முறை:

இந்த தற்காலிக அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர். என்ற முகவரிக்கு 17.06.2022 ம் தேதி மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்யவும்.

DCPU Notification & Application

Official Website

Post a Comment

0 Comments