தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையில் வேலை – பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre Tirupathur) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் வழக்கு பணியாளர் எனும் Case Worker பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Case Worker பணியிடங்கள்:
தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் வழக்கு பணியாளர் எனும் Case Worker பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
Case Worker தகுதி விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Mastor’s of Social Work / Counselling / Psychology / Development Management போன்ற பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் உடல் ஊனம் அற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருப்பவராக இருக்க வேண்டும்.
Case Worker அனுபவ விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு மேல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Case Worker ஊதிய தொகை:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
Case Worker தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Case Worker விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே இப்பதிவின் கீழ் உள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து கீழே கொடுத்துள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பத்தூர்.
0 Comments