தேசிய சுகாதார மையத்தில் பணிவாய்ப்பு – 8 வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார பணி (NHM) மையம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் X – Ray Technician, Operation Theatre Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
NHM பணியிடங்கள்:
- X – Ray Technician – 01
- Operation Theatre Assistant – 01
- Multi Purpose Hospital Worker – 04
மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
NHM கல்வி விவரம்:
X – Ray Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc, Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Operation Theatre Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் OT Technician Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Multi Purpose Hospital Worker பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானதாகும்.
NHM வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
NHM ஊதிய விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் கீழுள்ளவாறு மாத ஊதியம் பெறுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- X – Ray Technician பணிக்கு மாதம் ரூ.10,000/- வழங்கப்படும்.
- Operation Theatre Assistant பணிக்கு ,மாதம் ரூ.8,400/- வழங்கப்படும்.
- Multi Purpose Hospital Worker பணிக்கு மாதம் ரூ.8,400/- வழங்கப்படும்.
NHM தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
NHM விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ 10.06.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
0 Comments