AAVIN RECRUITMENT 2022 IN TAMIL | AAVIN நிறுவனத்தில் ரூ,43,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா?

 

AAVIN நிறுவனத்தில் ரூ,43,000/- ஊதியத்தில் வேலை வேண்டுமா? – உடனே விண்ணப்பியுங்கள்..!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN Villupuram) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Veterinary Consultant பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் இப்பதிவின் வாயிலாக நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். கல்வி, தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற இப்பணி குறித்த அனைத்து விவரங்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

AAVIN பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்டில் (AAVIN Villupuram) Veterinary Consultant பணிக்கு என 05 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Veterinary Consultant கல்வி விவரம்:

Veterinary Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தங்களது Degree-யை Veterinary Council-லில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

Veterinary Consultant வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Veterinary Consultant ஊதிய விவரம்:

Veterinary Consultant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.43,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

AAVIN தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 26.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

AAVIN விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த AAVIN நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தயார் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ள நேர்முக தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

AAVIN Notification Link

Official Website

Post a Comment

0 Comments