ICMR JOBS 2022 IN TAMIL | தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியம்

 

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியம் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant, Consultant, Jr. Consultant, Project Scientist போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தேசிய தொற்று நோயியல் நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (ICMR-NIE) காலியாக உள்ள Project Assistant (admin), Consultant (Epidemiology), Junior Consultant (Epidemiology), Project Technical Assistant, Project Junior Nurse, Project Staff Nurse, Project Assistant, Project Scientist-B (Non-Medical) (Lab), Project Junior Consultant, Project Scientist-B (Non-Medical), Project Scientist-C ஆகிய பணிகளுக்கு தலா 1 இடம் வீதம் மொத்தமாக 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ICMR-NIE கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 12ம் வகுப்பு, Graduation, Diploma, MBBS, MD, MAE, MPH, BDS, Master Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

ICMR-NIE வயது வரம்பு:
  • Project Junior Nurse பணிக்கு அதிகபட்ச வயது 28 என்றும்,
  • Project Assistant (admin), Project Staff Nurse பணிகளுக்கு அதிகபட்ச வயது 30 என்றும்,
  • Project Technical Assistant, Project Assistant பணிகளுக்கு அதிகபட்ச வயது 33 என்றும்,
  • Project Scientist-B (Non Medical) (Lab) பணிக்கு அதிகபட்ச வயது 38 என்றும்,
  • Project Scientist-B (Non-Medical), Project Scientist-C பணிகளுக்கு அதிகபட்ச வயது 40 என்றும்,
  • Project Junior Consultant பணிக்கு அதிகபட்ச வயது 45 என்றும்,
  • Junior Consultant (Epidemiology), Consultant (Epidemiology) பணிகளுக்கு அதிகபட்ச வயது 70 என்றும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • ICMR-NIE ஊதியம்:

    இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். விரிவான தகவலை அறிவிப்பில் காணலாம்.

    ICMR-NIE தேர்வு முறை:
    • Consultant (Epidemiology), Junior Consultant (Epidemiology), Project Technical Assistant (Statistics), Project Junior Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 03.06.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • Project Assistant (admin), Project Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 06.06.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Project Junior Nurse, Project Staff Nurse, Project Scientist-B (Non-medical) (Lab) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 07.06.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Project Scientist-B (Non-medical), Project Scientist-C (Medical/Non-medical) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 08.06.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • ICMR-NIE விண்ணப்பிக்கும் முறை:

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து ICMR-NIE, Chennai என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

    ICMR-NIE Notification & Application Link

Post a Comment

0 Comments