BOBCAPS வங்கி வேலைவாய்ப்பு..! | BOBCAPS JOBS 2022 IN TAMIL

 

Degree முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? – இதோ உங்களுக்கான BOBCAPS வங்கி வேலைவாய்ப்பு..!

வங்கித் துறையில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை BOBCAPS Bank தற்போது வெளியிட்டுள்ளது. IB Equity – Mid Level, IB Equity – Senior Level, IB Debt – Head ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற இப்பணி குறித்த அனைத்து விவரங்களும் எளிமையாக கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

BOBCAPS Bank பணியிடங்கள்:

BOBCAPS வங்கியில் IB Equity – Mid Level, IB Equity – Senior Level, IB Debt – Head ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

BOBCAPS Bank கல்வி விவரம்:

IB Equity – Mid Level, IB Equity – Senior Level பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduation, MBA, CFA, CA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

IB Debt – Head பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduation, MBA, CA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

BOBCAPS Bank அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BOBCAPS Bank வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

BOBCAPS Bank சம்பள விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOBCAPS Bank தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOBCAPS Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த BOBCAPS வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து careers@bobcaps.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். IB Equity – Mid Level, IB Equity – Senior Level பணிக்கு 01.06.2022 என்ற இறுதி நாளுக்குள்ளும், IB Debt – Head பணிக்கு 02.06.2022 என்ற இறுதி நாளுக்குள்ளும் விண்ணப்பித்து பயன்பெறவும்.

BOBCAPS Bank Notification & Application Link

Post a Comment

0 Comments