BECIL நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு | BECIL JOBS 2022

 

BECIL நிறுவனத்தில் Developer வேலைவாய்ப்பு – பொறியாளர்களுக்கு முன்னுரிமை..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Mobile Application Developer & PHP Developer பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BECIL பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், App டெவலப்பர் எனும் Mobile Application Developer மற்றும் PHP Developer பணிக்கு என்று தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Mobile Application Developer – 01
PHP Developer – 01

BECIL கல்வி விவரம்:

Mobile Application Developer மற்றும் PHP Developer பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science / IT பாடப்பிரிவில் B.E / B. Tech / M.Sc போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BECIL அனுபவ விவரம்:

Mobile Application Developer மற்றும் PHP Developer பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

BECIL ஊதிய விவரம்:

Mobile Application Developer மற்றும் PHP Developer பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட்ட பின் மாதம் ரூ.68,000/- ஊதிய தொகையாக பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.

BECIL தேர்வு முறை:

Mobile Application Developer மற்றும் PHP Developer பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு நிறுவனத்தின் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும், அதன் பின் பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விரைவுத் தபால் மூலம் 04.06.2022ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.


Post a Comment

0 Comments