தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – நாளை நேர்முகத்தேர்வு!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – நாளை நேர்முகத்தேர்வு!
தமிழகத்தில் அஞ்சல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நவ.8 நேர்காணல் நடைபெறுகிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அஞ்சல்துறை வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அரசுத் தேர்வுகள் நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீடு (பிஎல்ஐ) மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு (ஆர்பிஎல்ஐ) என இரண்டு திட்டங்கள் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து கிராமப்புற மக்கள் என அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நடப்பு ஆண்டில் புதிய பாலிசிகளை சேர்ப்பதற்கு அனைத்து அஞ்சல் துறையில் முகவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது இந்த காலிப்பணியிடங்களுக்கான ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் வரும் நவம்பர் 8ம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், பான் கார்டு நகல், ஆதார் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் ஈரோடு அஞ்சல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
இதற்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பு 18 முதல் 50 என அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆயுள் காப்பீட்டு முன்னாள் முகவர், முன்னாள் இராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், சுயதொழில் செய்பவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 0424-2258066 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
0 Comments