தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை – நவ.18 நேர்காணல்!

Follow Us

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை – நவ.18 நேர்காணல்!

 

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை – நவ.18 நேர்காணல்!



தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை – நவ.18 நேர்காணல்!

தமிழகத்தில் கோவை அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீட்டு துறையில் கிராமிய அஞ்சல் காப்பீட்டு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.

அஞ்சல் துறை வேலை:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. கூடிய விரைவில் தேர்வுகள் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். கொரோனாவை தொடர்ந்து வேலையில்லாமல் நிறைய பேர் தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிராமிய அஞ்சல் காப்பீட்டு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்பும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதி உடையவர்களாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் 65 வயதுக்குட்பட்ட மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்தவர்களும் இந்த பணிக்கு தகுதியுடையவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த காலிப்பணியிட அறிவிப்பானது கோவை மாவட்ட அஞ்சல் கோட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை இலவசமாக அஞ்சல் நிலையங்களில் அல்லது  docoimbatore.tn@indiapost.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்புவதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறு பெற்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் வரும் நவ.18 ஆம் தேதி காலை 10 மணியளவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு 0422 – 2558 541 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார். அதனால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Post a Comment

0 Comments