பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டமானது, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) உடன் இணைந்து, மே 2015 இல் மோடி அரசால் துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஜூலை 2018 ஆம் வரை சுமார் 13.74 கோடி நபர்கள் விபத்து காப்பீட்டை பெற்றுள்ளார்கள். இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகின்றது. இதனுடைய நன்மைகள் என்ன போன்ற பல்வேறு விபரங்களை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்றால் என்ன?
இது ஒரு டெர்ம் இன்ஸ்சுரன்ஸ் பாலிசி ஆகும். இது விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது உடல் ஊனத்திற்கு எதிராக வழங்கப்படும் ஒரு காப்பீடு திட்டம் ஆகும். இந்தத் திட்டம் 18 முதல் 70 வயது வரை உள்ள தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் தனி நபர் இறப்பிற்கு ரூ 2 லட்சமும், உடல் ஊனத்திற்கு ரூ 1 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படுகின்றது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் உங்களுக்காக இங்கே:
தகுதி: இந்த திட்டத்தில் பங்கு பெறும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 18 முதல் 70 வயது வரையிலான வயதுடைய தனி நபர்கள் (தனி கணக்கு அல்லது கூட்டு கணக்கு).
பிரீமியம் தொகை: வருடத்திற்கு 12 ரூபாய்
விபத்தினால் ஏற்படும் இறப்பிற்கு ரூ 2 லட்சம்.
இரண்டு கண்களையும் இழப்பது அல்லது இரண்டு கைகளையும் நிரந்தரமாக இழப்பது அல்லது இரண்டு கால்களையும் இழப்பது, அல்லது ஒரு கண்ணில் பார்வைத் திறனை நிரந்தரமாக இழப்பது அல்லது கை அல்லது காலை பயன்படுத்த இயலாமல் தவிப்பது போன்ற இழப்புகளுக்கு இழப்பீடாக ரூ 2 லட்சம்
ஒரு கண் அல்லது அல்லது ஒரு கை அல்லது ஒரு காலை இழப்பது போன்ற இழப்புகளுக்கு ரூ. 1 லட்சம்.
பிரீமியம் செலுத்தும் முறை: இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ம் தேதி முதல் மே 31 ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்த வேண்டும். ப்ரீமியம் செழுத்திய வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு திட்ட்ம் அடுத்த வருடத்தில் இருந்து தொடங்கும். இந்த திட்டத்தின் கீழ் காப்பீட்டைப் பெற இந்த காப்பீடு திட்டத்திற்கான ப்ரீமியத்தை ஆட்டோ டெபிட் முறையில் செலுத்த வேண்டும். அதாவது, ரூ 12 ஆனது மே 31 ம் தேதிக்கு முன்னர், உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே காப்பீடு திட்டத்திற்கு செலுத்தப்படும். ஒரு வேளை உங்களுடைய கணக்கு கூட்டு வங்கிக் கணக்குஎனில் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்காகவும் ரூ 12 எடுத்துக் கொள்ளப்படும்.பாலிசி கவர் கால அளவு: ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக இந்தப் பாலிசியை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் அல்லது நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கணக்கிலிருந்து பிரீமியம் தானாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
இந்த திட்டத்தில் சேர நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுக வேண்டும். வங்கியில் நீங்கள் தேவையான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அந்த படிவத்தில் ஆட்டோ டெபிட் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த திட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருக்கின்றன
திட்டத்தில் இருந்து வெளியேறிய நீங்கள் மீண்டும் இந்த திட்டத்தில் சேர முடியுமா?
ஆமாம், சேர இயலும். திட்டத்தை விட்டு வெளியேறிய நீங்கள், மீண்டும் இந்த திட்டத்திற்கான, வருடாந்திர பிரீமியத்தை செலுத்தி திட்டத்தில் இணைய இயலும்.
காப்பீட்டு திட்டம் எப்பொழுது முடியும்?
தனி நபர் 70 வயதை அடையும் போது.
உங்களுடைய வங்கி கணக்கை நீங்கள் மூடும் பொழுது.
உங்களுடைய வங்கிக் கணக்கில் பிரீமியம் செலுத்த தேவையான போதுமான நிதி இல்லாத போது.
ஒருவர் மற்றொரு காப்பீட்டுத் திட்டத்தில் ப்ரீமியம் செலுத்தியிருந்தாலும், இந்தத் திட்டம் தொடருமா?
ஆம்.
காப்பீட்டுத் திட்டமானது இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இறப்பு மற்றும் ஊனத்தை கவர் செய்யுமா?
ஆமாம், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் PMSBY வரையறுத்த மரணம் மற்றும் ஊனத்தை இந்த திட்டம் கவர் செய்யும். ஆனால் இந்த திட்டத்தில் தற்கொலைக்கு கவர் கிடையாது. ஆனால் கொலையினால் ஏற்படும் மரணத்திற்கு இந்த திட்டத்தில் கவர் கிடைக்கும்.
விபத்துக்குப் பிந்தய மருத்துவ செலவுகளுக்கு இந்தத் திட்டத்தில் கவர் கிடைக்குமா?
மருத்துவ செலவுகளுக்கு கவரேஜ் இல்லை
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் தொகையை பெறுவது எப்படி?
தனி நபருக்கு ஏற்படும் ஊனத்திற்கு, காப்பீட்டாளரின் வங்கிக் கணக்கிற்கு க்ளெய்ம் தொகை வரவு வைக்கப்படும். தனி நபர் மரணம் அடைந்தால், இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பொழுது காப்பீட்டாளர் குறிப்பிட்ட வாரிசின் வங்கிக் கணக்கில் க்ளெய்ம் தொகை வரவு வைக்கப்படும்.
பாலிசி நன்மைகளைப் பெற எப் ஐ ஆர் அவசியமா?
விபத்து அல்லது குற்றத்தினால் ஏற்படும் மரணம் அல்லதூ ஊனத்திற்கு எதிராக க்ளெய்ம் பெற காவல்துறையின் எப் ஐ ஆர் கண்டிப்பாக தேவை. எதிர்பாராத விபத்தினால் (விலங்கு தாக்குதல், அல்லது மரத்தில் இருந்து விழுவது போன்றவை) ஏற்படும் ஊனம் மற்றும் மரணத்திற்கு மருத்துவமனை அறிக்கையே போதுமானது. விபத்தை உறுதிப்படுத்தும் ஏதேனும் ஒரு சான்று மிகவும் அவசியம்.
0 Comments