வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்..

 இனி வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்.. அறிவிப்பை வெளியிட்ட அரசு !!


தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.






இந்த நிலையில், தமிழகத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. வருகிற 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளையும் வருகிற 8 ஆம் தேதி முதல் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி வரும் 8ஆம் தேதி முதல் திறக்கப்படும்.



இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments