இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலி...
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் நாடு முழுவதும் 12,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,02,591 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நேற்று ஒரே நாளில் 120 பேர் கொரோனாவால் பலியானதையடுத்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,54,823 ஆக உயர்ந்துள்ளது. 15,853 பேர் குணமடைந்ததையடுத்து மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,96,308 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 49,59,445 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments