தமிழகத்தில் பிப். 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கும்- தமிழக அரசு
MAKKAL SEVAI. 31-01-2021
தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு, மேலும் பல புதிய தளர்வுகளுடன் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, வருகிற 8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாணவர்களுக்கான விடுதிகளை திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
0 Comments