கும்ளே வழியில் பும்ரா

 கும்ளே போல் பும்ரா...

   கிரிக்கெட் 

புதுடில்லி: கும்ளே போல பும்ரா சுழற்பந்து வீச்சில் அசத்திய வீடியோவை பி.சி.சி.ஐ., வெளியிட்டது.இந்திய அணி சுழல் 'ஜாம்பவான்' அனில் கும்ளே. இந்திய டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் 'நம்பர்-1' இடத்தில் உள்ளார். உலக டெஸ்ட் வரலாற்றில் இலங்கையின் முரளிதரன் (800) ஆஸ்திரேலியாவின் வார்னுக்கு (708) அடுத்த இடத்தில் உள்ளார் கும்ளே. இவர் 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரைப் போல பந்து வீச முயற்சி செய்துள்ளார் இந்தியாவின் பும்ரா. வேகப்பந்து வீச்சாளரான இவர், வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்த சக வீரருக்கு பந்தை சுழற்றியுள்ளார். கும்ளே, பும்ரா என இருவரும் பந்து வீசும் வீடியோவை சேர்த்து, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தனது 'டுவிட்டர்' வலைதளத்தில் வெளியிட்டது. அதில்,'பும்ரா வேகமான பவுன்சர் பந்துகள் வீசித் தான் நாம் பார்த்துள்ளோம். ஆனால் இதுவரை பார்த்திராத வகையில் பந்து வீசுகிறார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. 'ஜாம்பவான்' கும்ளே போல பந்து வீச முயற்சித்துள்ளார்,' என தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments