பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம்:
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.
- ஆதார் கார்டு
பட்டா & / சிட்டா
வங்கி புத்தகம்
PM Kisan Samman Nidhi திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்தல்.
pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். புதிதாக திறக்கும் பக்கத்தில் ‘FARMER CORNERS’ என்ற விருப்ப தேர்வு தெரியும்.
‘NEW FARMER REGISTRATION என்பதை தேர்வு செய்து அதை சொடுக்கவும்.
அடுத்து திறக்கும் பக்கத்தில் ஆதார் அட்டை எண் மற்றும் Capcha போன்ற சில விவரங்களை உள்ளீடு செய்யவும்.
அடுத்து continue என்பதை சொடுக்கி தொடரவும்.
பெயர், கைபேசி எண், வங்கி மற்றும் நிலம் தொடர்பான விவரங்கள் உட்பட அனைத்து தேவையான விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
இறுதியாக save செய்து விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
ஒரு பதிவு எண் மற்றும் தொடர்பு எண் ஆகியவை உருவாக்கப்படும். இந்த எண்களை எதிர்கால தொடர்புகளுக்காக பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
PM-Kisan உதவி எண்கள்
திட்டம் தொடர்பான எந்தவிதமான உதவிக்கும் 155261 அல்லது 1800115526 (கட்டணமில்லா) என்ற எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
0 Comments