தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 09:30 மணிக்கு வெளியானது. காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் வெளியான 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் கீழே உள்ள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:
கொரோனா தொற்று காரணமாக 2019 -20 கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டன. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் இந்த முறை பொதுத் தேர்வு முடிவகள் வெளியிடப் பட்டுள்ளன.
மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்துள்ள செல்ஃபோன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு உள்ளது, மேலும் மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்:
ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மதிப்பெண் சார்ந்த குறைப்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதுதொடர்பாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
0 Comments