சென்னை மிக விரைவில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய டபுள் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநகரப்பேருந்துகள்:
சென்னை நகரின் பொது போக்குவரத்தின் முதுகெலும்பாக இருப்பது மாநகர பேருந்துகள். நகரின் அனைத்து பகுதிகளுக்கும் 35-க்கும் மேற்ப்பட்ட பணிமனைகளில் இருந்து சாதரண பேருந்துகள், சொகுசுப்பேருந்துகள், ஏசி பேருந்துகள் என மொத்தம் 3500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கபட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக போக்குவரத்துக்கழகமும் பேருந்துகளில் பல்வேறு புதிய மாற்றங்களை செய்து வருகிறது.
டபுள் டக்கர் பேருந்துகள்:
அந்த வகையில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய தாழ்தள மின்சார பேருந்துகளும் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. மேலும் 17 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஓடிய இரட்டை அடுக்கு டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது.
தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் (NCAP) கீழ் 20 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், வார இறுதி நாட்களில் பாரம்பரிய வழித்தடங்களிலும், வார நாட்களில் அதிக தேவை உள்ள வழித்தடங்களிலும் இந்த வாகனங்களை இயக்க MTC திட்டமிட்டுள்ளது.
தனியார் பங்களிப்புடன்:
NCAP இன் கீழ் 10 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், மொத்த செலவு ஒப்பந்த மாதிரியைப் பின்பற்றும், அங்கு ஒரு தனியார் ஒப்பந்ததாரர் பேருந்துகளை இயக்குவார் மற்றும் ஒரு கிலோமீட்டருக்கு ஊதியமாக வழங்க்கப்படலாம். பாதை திட்டமிடல் மற்றும் கட்டணம் நிர்ணயம் ஆகியவற்றில் மாநில அரசு கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும்.
இதில் முதற்கட்டமாக 20 டபுள் டக்கர் பேருந்துகளை அடுத்த 2 மாதங்களுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர எம்டிசி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் வழக்கமான பயன்பாட்டைத் தவிர, பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் வார இறுதி நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படும். முன்மொழியப்பட்ட பாரம்பரிய வழித்தடங்களில் அண்ணா சாலை, காமராஜர் சாலை மற்றும் பிற முக்கிய சாலைகள், அதே போல் மகாபலிபுரத்திற்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஆகியவை அடங்கும். இந்த சுற்றுலாக்கள் முன்பதிவு செய்யப்படும்
வழியில் உள்ள அடையாளங்களின் வரலாற்றை விவரிக்கக்கூடிய சுற்றுலா வழிகாட்டிகளை நாங்கள் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்," என்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் பிரபுசங்கர் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.
17 ஆண்டுகளுக்கு பிறகு:
1970களில் முதன்முதலாக இரட்டை அடுக்கு பேருந்துகள் அறிமுகமாகி, சுமார் ஒரு 10 ஆண்டுக்காலம் இயக்கப்பட்டன. பின்னர் 1980களில் இந்த சேவை நிறுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் சென்னையில் ஓடத் தொடங்கின.
கடைசியாக தாம்பரம்–பிராட்வே மார்க்கத்தில் 18ஏ என்ற எண்ணில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது மற்றும் பல மேம்பாலங்கள் கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதால், 2008ஆம் ஆண்டு இந்த சேவை நிறுத்தப்பட்டது.

0 Comments