கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.11,000 நிதியுதவி..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

Follow Us

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.11,000 நிதியுதவி..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

 மத்திய அரசு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நலனுக்காக ஒரு சிறப்பு நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டம் தான், பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டம். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், மிஷன் சக்தியின் ஒரு பகுதியாக, 2017 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

                                                                               


இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறப்பிற்கு பின்னரும் பெண்களுக்கு ஏற்படும் ஊதிய இழப்பை ஈடுசெய்வதற்கான ஒரு பகுதியளவு இழப்பீட்டை வழங்குவதுதான். இதன் மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கும் சூழலை அரசு உறுதி செய்கிறது. மேலும், 2013ஆம் ஆண்டில், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013-இன் கீழ் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தின் கீழ், முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் தாய்மார்களுக்கு மொத்தமாக ரூ.11,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெற, விண்ணப்பதாரர்கள் சில தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


அதாவது, விண்ணப்பதாரர் பட்டியலின அல்லது பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிதியுதவி, பயனாளிகளுக்கு இரண்டு தவணைகளாக நேரடியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள தாய்மார்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான PMMVY.WCD.GOV.IN என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments