8ம் வகுப்பு போதும்.. அறநிலையத்துறையில் வேலை.. இப்படியொரு சான்ஸ் கிடைக்காது!

Follow Us

8ம் வகுப்பு போதும்.. அறநிலையத்துறையில் வேலை.. இப்படியொரு சான்ஸ் கிடைக்காது!

 தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த கோயில்களின் நிர்வாக பணிகளை அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், கோயில்களில் உள்ள பணியாளர்களையும் அறநிலையத்துறை நிரப்பி வருகிறது. மாவட்ட ரீதியாக கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை அறநிலையத்துறை நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது கோவை மாவட்டம் பட்டீசுவரசுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


கோயம்புத்தூர் பட்டீசுவரசுவாமி கோயில் பணியிடங்கள்


கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டத்தில் உள்ள அருள்மிகு பட்டீசுவரசுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதாவது, மருத்துவர் பணிக்கு ஒரு இடங்களும், செவிலியர் பணிக்கு இரண்டு இடங்களும், நர்சிங் அசிஸ்டெண்ட் பணிக்கு 2 இடங்களும் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு 2025 டிசம்பர் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore Patteeswaram Temple: கல்வித்தகுதி


கோயம்புத்தூர் பட்டீசுவரசுவாமி கோயிலில் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும். செவிலியர் பணிக்கு டிப்ளமோ அல்லது பொது நர்சிங் முடித்திருக்க வேண்டும். நர்சிங் அசிஸ்டெண்ட் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore Pateeswaram Temple: வயது விவரம்


மருத்துவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2025 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2025 அன்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நர்சிங் அசிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2025 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


Coimbatore Pateeswaram Temple: மாத சம்பளம் எவ்வளவு?


மருத்துவர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வழங்கப்படுகிறது. செவிலியர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படுகிறது. நர்சிங் அசிஸ்டெண்ட் பணிக்கு மாத சம்பளமாக ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை வழங்கப்படுகிறது.


Coimbatore Pateeswaram Temple: விண்ணப்பிப்பது எப்படி?


மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கோவை பட்டீசுவரசுவாமி கோயில் அலுவலகத்தில் விண்ணப்பம் நேரடியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும், Hrce.Tn.Gov.IN அல்லது Perurpatteeswarar.TN.Gov.In என்ற இணையள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரங்களில் அரசு விடுறை அல்லாத நாட்களில் அலுவலக நேரங்களில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் டிசம்பர் 2ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி


உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், கோவை மாவட்டம் - 641 010 என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments