அதாவது 12ம் வகுப்பில் சயின்ஸ் இல்லாத பிரிவைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு அக்கவுண்ட்ஸ் எனப்படும் கணக்கு பதிவியல் பாடம் இருக்கிறது. இந்தத் தேர்வு எழுதுவோர் இத்தனை காலம் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி கிடையாது. இருப்பினும், அதற்கு அனுமதி தர வேண்டும் எனச் சொல்லி பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்றே கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டரை தேர்வுக்கு எடுத்துச் செல்லலாம். அதைப் பயன்படுத்தித் தேர்வுகளை எழுதலாம். நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது அக்கவுண்ட்ஸ் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.
இந்தாண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் பிப்ரவரி மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 16ம் தேதி வரை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி ஆரம்பித்து மார்ச் 26ஆம் வரை நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். மாநிலம் முழுக்க 8.07 லட்சம் மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகிறார்கள். 10ம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்குப் பிப்ரவரி 9 முதல் 16ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து மார்ச் 11 முதல் தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. அதேபோல 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8.70 லட்சம் மாணவ மாணவிகள் எழுதவுள்ளனர்.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கணினி வழியில் தேர்வெழுதக் கடந்தாண்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடந்தாண்டு இந்த முறையில் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து இவ்வாண்டும் அதே முறையில் தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுத வசதியாகக் கூடுதலாக ஒரு மணி நேரம் காலவகாசம் வழங்கப்பட உள்ளது.
0 Comments