TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

Follow Us

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை இணைய வழியில் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தேர்வர்களுக்கான சேவைகளை இணைய வழியில் வழங்கும் விதமாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை இணைய வழியில் பெறும் வசதி தேர்வாணையத்தால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.


பெறுவது எப்படி?


https://rtionline.tn.gov.in/ தேர்வர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் மற்றும் முதல் மேல் முறையீட்டு மனுக்களை என்ற இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் இந்த இணைய வழி சேவையை பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் தேர்வர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு மனுக்களை தேர்வாணையத்திற்கு கைமுறையாக தபால் மூலம் அனுப்புவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.


ஆன்லைன் முறையிலேயே அனைத்தும்


முன்னதாக விண்ணப்பப் படிவம் பெறுவது, விண்ணப்பிப்பது, விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வது, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வது என அனைத்து அம்சங்களும் டிஎன்பிஎஸ்சியில் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தற்போது தேர்வர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்கள் மற்றும் முதல் மேல் முறையீட்டு மனுக்களை என்ற இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தற்போது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments